காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

1 மனோகரன் :
அளவான அன்பு.
2 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
8 rajan:
கேள்விக்குறியாகும் டார்வினின் பரிணாமக்கொள்கை - சிரித்திரன்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.
18 manoharan :
சிரித்து இரன் = சிரித்திரன் - பகுத்தறிவாளன்.
108 பாபு.:
தகவல் பண்கொம்.நெற்.
1 அற்புதன் :
மனிதனேயல்ல.
1 Gopal:
மரண அறிவித்தல்: குணசிங்கம் புஸ்பராசா.
1 வீரய்யன் :
உண்மையானவராக இரு.
21 selvaraju:
வேத கணிதம் என்பதற்காக ஒரு இணையத்தளம்.
3 நூர் முஹம்மத் :
ஆயுளை கூறும் ரத்த பரிசோதனை.
1 த.தனகோபால்:
60வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் சிவானந்தம்.
2 அன்டன் மனோகரன் :
நினைவு நன்கொடை அமரர் தம்பித்துரை தவராஜசிங்கம்.
21 mabel hernandez:
புதிய ஜனாதிபதி மைத்திரிபால இன்று பதவியேற்பு.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

செய்திகள்

கபாலி டீசர்.

கலைப்புலி தாணு அறிவித்திருந்தபடி ’கபாலி’ டீசர் சற்று முன் வெளியானது. அவரது ஸ்டைலான நடையென்றாலும், ஸ்பீடாக இல்லாமல் ஸ்டைலிஷாக நடந்து வர’ நெருப்புடா’ என்றொலிக்கிறது பிஜிஎம். வரச்சொல்லுடா அவனை என்றதும், எந்த கபாலின்னு நெனைச்ச? என்று ‘கபாலிக்கு’ விளக்கம் கொடுக்கிறார் ரஜினி. ஒரு நொடி, பூப்போட்ட சட்டையில் ‘சிவாஜி’ பட ரஜினி சாயலிலும் வருகிறார். ஃப்ளாஷ்பேக்காக இருக்க வேண்டும். கபாலி டீசரில், மிக முக்கியமாய்ப் பாராட்டப்பட வேண்டியவர் சந்தோஷ் நாராயணன். தன் சிறப்பையும் விட்டுக் கொடுக்காமல், அதிரிபுதிரி தடாலடி இசையெல்லாம் இல்லாமல் ஒருவித ஹீரோயிச பிஜிஎம் குடுத்திருக்கிறார். டீசர் பார்த்து முடித்ததுமே அந்த பிஜிஎம்மை உங்கள் உள்ளம் முணுமுணுக்கும். வெல்டன் சந்தோஷ். பா.ரஞ்சித்தின் ட்ரேட் மார்க்கான ‘மகிழ்ச்சி’யை ரஜினி சொல்ல… முடிகிறது டீசர். வெளியான 15 நிமிடங்களில் ஐம்பதாயிரம் பார்வையாளர்களைத் தொட்டிருக்கும் அந்த டீசர்.. இதோ உங்களுக்காக…

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-05-2016

இரண்டு மடங்காகிய கருணாநிதி சொத்துக்கள்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன் எம்எல்ஏவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று சிதம்பரம் நகர வீதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் பேசியதாவது: அண்ணாமலை பல்கலைக்கழகம் சீர்கேட்டில் சிக்கிய போது அதை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று போராடி வெற்றிபெற்ற பங்கு பாலகிருஷ்ணனையே சாரும். 1967-ல் காங்கிரஸ் பலம் பொருந்திய கட்சியாக இருந்தது. அப்போது அண்ணா கூட்டிய கூட்டணிதான் அதை தோற்கடித்தது. அதேபோல் பணபலம் பொருந்திய கூட்டணியை தற்போது நாங்கள் அமைத்துள்ள கூட்டணி தோற்கடிக்கும். அவர்களை இனிமேல் ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் செய்யும் மாற்றம்தான் உண்மையான மாற்றம். அதிமுக, திமுக கட்சிகள் வாழ்வு, சாவு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்க மாட்டார்கள். ஆனால் கனிம வளம் கொள்ளை, ஊழல், லஞ்சம் உள்ளிட்டவைகளில் ஒன்றாக செயல்படுவார்கள். வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஜெயலலிதா, கருணாநிதியின் சொத்துகள் இரட்டிப்பு ஆகியுள்ளன. அது எப்படி. ஆனால் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாலகிருஷ்ணனின் சொத்து மதிப்பு இரட்டிப்பு ஆகியிருக்கிறதா? அப்படி இரட்டிப்பு ஆகியிருந்தால் அவருக்கு ஓட்டு போட வேண்டாம் என்றார்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-05-2016

'கூட்டாட்சி முறை இலங்கையை பிரிக்கவல்ல'.

கூட்டாட்சி முறை என்பது இலங்கையைப் பிரிப்பதற்கானது அல்ல என்று தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்குப் பகுதியில் உள்ள வவுனியாவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த விக்னேஸ்வரன் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளை ஒன்றாக கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கான ஒரு ஏற்பாடுதான் கூட்டாட்சி முறை. இது நாட்டை பிரிப்பதற்காக அல்ல. கூட்டாட்சி முறையால் நாடு பிளவுபடாது என்பதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன. எனவே, நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் கூட்டாட்சி முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்லாது இதர 7 மாகாணங்களிலும் கூட்டாட்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் சிறுபான்மையின தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான விக்னேஸ்வரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கூட்டாட்சி முறையை அமல்படுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்கு இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ளவர்கள் (சிங்களர்கள்) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-05-2016

விநோதமான செய்திகள்

எம்மவர் ஆக்கங்கள்

பிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர் - மனுவேந்தன்.

பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு தொடர்பாக எமது சமுதாயத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றே நான் நான் என் இளமைக்காலம்,அதுவும் ஊரில் வாழ்ந்த காலம்  வரையில் எண்ணிக்கொண்டிருந்தேன்.ஏனெனில் எமது தமிழ்ப் பெற்றோர்கள் என்றும் தம் பிள்ளைகளின் உடல்,கல்வி சம்பந்தமான விடயங்களில் ஏனைய சமுதாயங்களை விட, மிகவும் என்பதனைவிட அதிகம் கவனம் செலுத்துபவர்களாக வாழும் பழக்கம் உடையவர்களாக காணப்படுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்தான்.   இருந்தாலும்,  அன்றும், இன்றும் [புலம்பெயர்ந்து வளர்ந்த நாடுகளில் வாழ்வோர்கூட]பிள்ளைகளின் சில விடயங்களில் பெற்றோரின் அளவுக்கு அதிக கவனங்கள், பிள்ளைகளின் வளர்ச்சிக்கு  தடங்கலாக நடந்து கொள்வது அவதானிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.அவையாவன:   1.குழந்தைகள் பேச ஆரம்பித்தும்,அவர்கள் காணும் காட்சிகளினை  வைத்து கேட்கும் கேள்விகள் கொஞ்சம் துடுக்குத்தனமாகவே இருக்கும்.அதற்கு உங்கள் பதில் புத்திசாலித்தனமாகவும்,பிள்ளையின் அறிவினை வளர்க்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.   -ஆனால் எமது பெற்றோர்கள் என்ன கேள்வியிது என பிள்ளையின் வாயை மூடும் அளவிற்கு அதட்டி,உரப்பி அப்பிள்ளையின் வாய்க்கு  மட்டுமல்ல அப்பிள்ளையின் சுயசிந்தனை  வளர்ச்சிக்கும் சேர்த்துப்பூட்டுப் போட்டுவிடுகிறார்கள்.   2.வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப உலகில் பிள்ளைகளுக்கு தேவையான சாதனங்களைமட்டும் குறிப்பிட்ட காலத்திற் கொருதடவை வாங்கிக் கொடுங்கள்.   -ஆனால் எமது பெற்றோர் ஒரு ”game’புதிதாக வருகிறது எனில் பிள்ளை கேட்கமுதலே அதனை வாங்கிவந்து அதன் பொறுமையினை பூச்சியமாக்கிக் கொள்வர்.   3.பிள்ளைகளின் சுட்டித்தனங்களின்போது அவற்றினை பொறுத்துக்கொள்ள ப்பழகுங்கள்.   ஆனால் எமது பெற்றோர்கள் பிள்ளைகள் ஏறினாலும் ,குற்றம், இறங்கினாலும் குற்றம் கூறி பய உணர்வுகளையும்,கூச்ச உணர்வுகளையும் பிள்ளையிடம் வளர்த்துவிடுகிரார்கள்.   4.ஆரம்பக் கல்விக்காக ஆரம்பிக்கும் பிள்ளைகளுக்கான [அநேகமாக அருகில் அமைந்திருக்கும்]  பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும்போது, பிள்ளைகளை சுதந்திரமாக நடந்துசெல்ல அனுமதியுங்கள். இங்கே பிள்ளைகள் நடந்து செல்கின்றபோழுது  பாதையில் சுய கவனத்தினை கற்றுக் கொள்ள முடிகிறது.   -ஆனால் எமது பெற்றோர்கள் பிள்ளைகளை ஒருகையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு குடுகுடு வென்று இழுத்துக்கொண்டு பாடசாலை செல்வதன் மூலம் பிள்ளைகளின் கவனக்குறைவுக்கு காரணமாகிறார்கள். 5.கல்விக்கான வீட்டு வேலைகளோ,அல்லது அவர்களுடைய அன்றாட கடமைகளிலும் தேவைக்கு அதிகமாகத் தலையிடுவதனை தவிர்ப்பதன் மூலம்  பிள்ளைகளினது பிரச்சைனகளுக்கான தீர்வை தானாக கண்டுபிடிக்கும்  அல்லது துணிந்து முடிவெடுக்கும் திறமையினை பிள்ளைகள் பெற்றுவிடுகிறார்கள்.   -ஆனால் எமது பெற்றோர்கள் பிள்ளைகளின் மேற்படி விடயங்களில் அதிக தலையீடுகளையே கொண்டுள்ளார்கள்.   6.ஆரம்பக் கல்விக் காலத்திலேயே அவர்களின் புத்தகப் பையையும் அவர்களே சுமந்துகொண்டு செல்லப் பழக விடுங்கள்.இதன்மூலம் பிள்ளைகளிடம் அவர்களுக்கென்றும் சில சொந்த சுமைகள் என்ற பொறுப்புணர்வு சிறுவயதினிலேயே உருவாக வழி கொடுங்கள்.   -ஆனால் எமது பெற்றோர்கள் மறுகையில் பிள்ளையின் புத்தகப்பையினை தாங்கிச் செல்வதன்மூலம்,பிள்ளைக்கு எல்லாக் காலத்திலும், எல்லாத்தேவைகளுக்கும் ஒரு எடுபிடி தேவை என்பதினை நெஞ்சில் விதைத்து விடுகிறார்கள்.இப்பழக்கம் பெற்றோரின் வயதுபோன காலத்திலும் பிள்ளையினால்  பேணப்படும்போது பெற்றோர் மனம்நோக வேண்டிவரும்.   7.பிள்ளைகள் பரீட்சையில் எடுக்கும் புள்ளிகள் குறித்து அவர்களைப் பாராட்டி இன்னும் முயற்சிபன்ணினால் அடுத்தமுறை இன்னும் கூடப் புள்ளிகள் எடுக்கலாம் எண்டு  ஊக்குவியுங்கள்.   -ஆனால் எமது பெற்றோர்கள் பரீட்சையில் பிள்ளை 99 எடுத்தாலும் ஏன் 100 எடுக்கவில்லை என்று கடிந்து பிள்ளைக்கு ஏமாற்றத்தினை வழங்குகிறார்கள்.   8 பல்கலைக்கழகம் நுழைவதற்கான கல்வி தெரிவு செய்யும் விடயத்தை பிள்ளையின் கையிலே விட்டுவிடுங்கள்.வளர்ந்த நாடுகளில் அதனைத் தெரிவுசெய்ய அவர்களுக்குதவியாக அவர்கள் கற்கும் பாடசாலையிலேயே இதற்கென வழிகாட்டி ஆசிரியர்கள் சேவைசெய்ய முழுமனதுடன் காத்திருக்கிறார்கள்.   -ஆனால்பிள்ளையின் கல்வி தெரிவுசெய்யும் களத்திலேயே  எமது பெற்றோர்கள் குதித்துடுவர்.அம்மா ‘டொக்டர்’ என அப்பா ‘என்ஜினியர் ‘என வீடே போர்க்களமாக, இனியும் படிக்கவேணுமோ என்றே  சிந்திக்குமளவுக்கு பிள்ளை நிலை வந்துவிடும்.   மேலும்,இங்கே நான் அவதானித்துள்ளேன்.பிள்ளைகள் தமிழ் வகுப்புக்களுக்கு காரில் அழைத்து வரும் பெற்றோர்கள் காரை அங்கு நிறுத்தியதும் இறங்கி ஓடிவந்து கதவைத்திறந்து ஒருகையினால்  பிள்ளையின் கையினைப்  பிடித்து இறக்கிக்கொண்டு,மறுகையினால் பிள்ளையின் புத்தகப் பையினை எடுத்துக் காவிக்கொண்டும் செல்வர்.   இச்செயலெல்லாம் ஏன்?   அத்துடன்,கடன்காரர்களாக புலம்பெயர்ந்து கால்பதித்த நாங்கள் வந்த காலத்திலிருந்து அடிப்படைவேதனத்தில் வேலைபார்த்து அக்கடனையும் கடந்து பிள்ளைகளின் கல்வியினையும் கடந்து வசதியுடன் வாழ்கிறோ மெனில்,இங்கேயே கல்விமுடித்து,எம்மைவிட அதிக வேதனத்தில் தொழில் செய்து வாழப்போகும் இப்பிள்ளைகள் எப்படிவாழமுடியும் என்பதனை நாம் குறிப்பிட்டுச் சொல்லத்தேவையில்லை.ஆனால் அன்றுபோல் இன்றும்  பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்கள் சேர்ப்பதற்காக மிகவும் சிரமப்பட்டுஅடிப்படைவேதனத்தில் பல தொழில்கொண்டு வாங்கின வீட்டிலும் வாழாது அலைவது, பிள்ளைகள் மத்தியில் விசனத்தினையே ஏற்படுத்தி வருகிறது.இவ்விடத்திலும் பிள்ளைகளை சோம்பேறிகளாக்கவும்,அவர்களுக்கும் தமக்கும் இடையில் ஒரு இடைவெளியினை உருவாக்கவே  பெற்றோர்கள் சிரமப்பட்டுகொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.   பிள்ளைகளின் அனைத்து திறமைகளும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பெற்றோர்கள் செய்யவேண்டியவை.   1.உற்சாகப்படுத்தல்.   2.தன்னம்பிக்கை ஊட்டுதல்.   3.பொறுமையை வளர்த்தல்.   4.பலவகை சூழல்களில் அவர்களை ஈடுபடச் செய்து தீர்வு காணல்.   5.அவர்களுடைய சுயமரியாதைக்கு.. மதிப்பளித்தல்.   6.அவர்களுடன் கலந்துரையாடல்.   7.நல்ல நண்பர்கள் தொடர்பாக பாராட்டுதல்.   8.திறமைகளுக்குப் பரிசளித்தல்.   9.அவர்களுக்குரிய செயல்களில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தல்.என்பனவாம்.   பெற்றோரிடம் என்றும் பிள்ளைகளின்மேல்  உள்ள அன்பு அளவிடமுடியாததுதான்.அதற்காக தம் திறமைகளிலும் முயற்சியிலும் பிள்ளைகள் நொண்டியாக அந்த அன்பு காரணமாகிவிடக் கூடாது என்பதே இக்கட்டுரையின் நோக்கம். எண்ணம்:செல்லத்துரை,மனுவேந்தன்.     மனுவேந்தன் செல்லத்துரை - கனடா.  

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 11-11-2015

சமூகம்

சிறுவர்கள்

விவசாயியும், பாம்பும் நாரையும்.

ஒரு பாம்மை மக்கள் அடித்து விரட்டினார்கள், அது ஓரிடத்தில் பயந்து ஒளிந்திருந்தது. அந்தப் பக்கமாக ஒரு விவசாயி வந்தான் அவனிடம் ஐயா என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சி மன்றாடியது. விவசாயியும் அதன் மீது இரக்கப்பட்டு தன் வயிற்றுக்குள் ஒளிந்து கொள் என்றான், அவன் குந்திக்கொள்ள பாம்பும் பின்புற வழியாக அவன் வயிற்றில் புகுந்து குடருக்குள் நுழைந்து வயிற்றுக்குள்ளே பத்திரமாக ஒளிந்து கொண்டது. கொஞ்சத் தூரம் சென்றதும் பாம்பே பத்திரமான இடத்திற்கு வந்துவிட்டோம் வெளியே வா என்றான் விவசாயி. இல்லை நான் வரமாட்டேன்.. இந்த இடம் கதகதப்பாக இருக்கிறது, நான் ஏன் வெளியே வரவேண்டும் என்று பாம்பு கேட்டது. வேறு வழியில்லாமல் வயிற்றுக்குள் பாம்பை சுமந்தபடியே சென்ற விவசாயி வழியில் ஒரு நாரையை கண்டு தன் துயர நிலையை சொன்னான். அதற்கு நாரை நீ முன்போலவே குந்தி நன்றாக முக்கு பாம்பு வெளியே வரும் நான் பிடித்துக் கொள்கிறேன் என்று சொன்னது. விவசாயியும் அப்படியே செய்தான் பாம்பு வெளியே தலையை நீட்டியது, அவ்வளவுதான் நாரை அதை வெளியே இழுத்து கொன்றது. அப்போது விவசாயிக்கு ஒரு கவலை பிறந்தது.. ஒரு வேளை பாம்பு குடலுக்குள் விஷத்தைக் கக்கியிருக்குமோ என்று பயந்தான். அவனுக்கு நாரை ஒரு யோசனை சொன்னது.. ஒரு நாளைக்கு ஒரு நாரைப்படி நான்கு நாட்களுக்கு நான்கு நாரைகளை பிடித்து சமைத்துச் சாப்பிடு விஷம் இருந்தால் அகன்றுவிடும் என்று வைத்தியம் கூறியது. அப்படியா இன்றே மருந்து சாப்பிட ஆரம்பிக்கிறேன் என் முதல் மருந்து நீதான் என்று நாரையைக் கழுத்தில் பிடித்துக் கொண்டான் விவசாயி. நாரையை வீடு கொண்டு சென்று ஒரு கூட்டில் அடைத்துவிட்டு, நடந்த விஷயத்தை மனைவியிடம் சொல்லி அதை கறி சமைக்கச் சொன்னான். அவன் மனைவி தன் கணவனை திட்டினாள்.. உன்னைக் காப்பாற்றிய நாரையை கொல்லப்போகிறாயா என்று கோபமாகக் கேட்டாள். நாரையை விட்டால் நான் இறந்துவிடுவேன் என்று விவசாயி அலறினான்.. ஆனால் அவள் கேட்கவில்லை. கணவன் இறந்தாலும் காரியமில்லை என்று கூட்டைத் திறந்து நாரையை வெளியே பறக்க விட்டாள், நாரை மகிழ்வாக பறந்தது ஆனால் பறக்கும்போது அந்தப் பெண்ணின் இரண்டு கண்களையும் சொடக் சொடக்கென கொத்திக் குருடாக்கிவிட்டு பறந்தது. தன் உயிரைவிட நாரையின் உயிர் பெரிதென கருதிய குருட்டு மனைவியுடன் குடும்பம் நடத்த முடியாதென அவளை அடித்துக் கொன்றான் விவசாயி.. மனைவி இறக்க அவனுக்கு பாம்பின் விஷம் வேலை செய்தது.. துடிதுடித்து அவள் பக்கத்திலேயே இறந்தான். குடியானவன், மனைவி, பாம்பு, நாரை இந்த நால்வரிலும் யார் நல்லவர்கள்…? எல்லோருமே தான் தப்பினால் சரி என்று நினைப்பவர்கள்தான்.. ஆனால் அனைவருமே ஒருவருக்காக மற்றவர் வாழ்வதைப் போல வேடமிட்டார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.. இதுபோல நமக்கு விசுவாசமானவர்கள் நமக்காகவே வாழ்வதாக நினைப்போம் ஆனால் தருணம் வரும்போதுதான் உண்மை தெரியும், அதுவரை யாரையும் கண்டு பிடிக்க முடியாது. இப்படித்தான் நண்பர்களும் உங்களுக்குக் கீழ்ப்படிவாக இருப்பதாக வேடம் போடுவார்கள், நீங்கள் சொல்வதற்கு ஆமாம் போடுவார்கள், சந்தர்ப்பம் வரும்போது காட்டிக்கொடுக்கும் சுயநலமிகளாக மாறுவார்கள். எனவேதான் நண்பர்களை பதவியில் அமர்த்தாதீர்கள் தகுதியானவரை பதவியில் அமர்த்துங்கள் என்றான் நெப்போலியன். ஆனால் நண்பர்களும் உங்களுக்கு வேண்டும் நீங்கள் செய்த தவறுகளை யாருடைய தலையில் போடுவது அதற்கு ஒரு நண்பன் வேண்டும். இப்படி பல நண்பர்களுடைய தலைகள் வரலாற்றில் துண்டாடப்பட்டது, ஒரு நண்பன் போனால் என்ன செய்வது என்று நினைக்கிறீர்களா.. அந்த இடத்திற்கு வர இன்னொருவன் காத்திருப்பான். இதுதான் உலகம்.. மேலைத்தேய இராஜதந்திர சிந்தனைகள் இப்படித்தான் நகர்கின்றன.. நல்ல பழமொழிகளை அறிவது மட்டும் சரியானதல்ல மறு பக்கங்களையும் பார்ப்பது அவசியமானது. காலில் விழுந்துவிட்டால் விசுவாசம் வந்துவிடும் என்றோ.. தியாகிகளை போற்றுவோருக்கெல்லாம் தியாக மனம் இருக்கிறதென்றோ தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள்.. எல்லாமே பாம்புகளும் நாரைகளுமாக இருக்கலாம் எச்சரிக்கை

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-04-2016

மேலிடம் நிலையற்றது.

மேலிடம் நிலையானது என்று கருதி தறி கெட்டு நடந்துவிடாதீர்கள்.. காரணம் : உங்கள் மேலிடம் என்றோ ஒரு நாள் வீழ்ச்சியடையும், அப்போது நீங்கள் நட்டாற்றில் நிற்பீர்கள். உங்கள் மேலிடத்தை வீழ்த்த முடியுமானால் விரைவாக வீழ்த்துங்கள் இல்லையேல் நீங்கள் வீழ்த்தப்படுவீர்கள். மேலிடம் தலைமை என்று எதுவுமே கிடையாது உண்மையில் எல்லாமே சந்தர்ப்பம்தான்… யானை மாலை போட்டு ராணியானவளும் மேலிடம்தான்.. மன்னனுக்கு புதல்வனாக பிறந்த முட்டாளும் மன்னன்தான்.. பல முட்டாள்கள் வாக்களித்த இன்னொரு முட்டாளே பிரதமாராக இருப்பான்.. எப்பொழுதுமே உங்கள் மேலிடமே உங்களுக்கு ஆபத்தானது எச்சரிக்கை

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 24-03-2016

புத்திசாலி.

பதவியும் அதிகாரமும் அடைய விரும்புவோர் மேலிடத்தைக் காட்டிலும் தான் புத்திசாலி என்று ஒருபோதும் காட்டிக்கொள்ளக் கூடாது. மேலிடம் தன்னைவிட பத்தி குறைந்தவர்கள் அருகில் இருந்து ஆமா போடுவதையே அதிகம் விரும்பும்.. பின்னர் பல மேலிடங்கள் அழிந்து பரிநாசமாக போகவும் இதுவே காரணமாக இருந்துள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 21-03-2016

ஆன்மீகம்

எம்மவர் அமைப்புகள்

மங்கள நிகழ்வுகள்

60வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் சிவானந்தம்.

  நெதர்லாந்தில் வசிக்கும்  திரு.திருமதி. சிவானந்தன் – சாவித்திரி ஆகியோருக்கு 60 வது பிறந்தநாள் விழாவை எதிர்வரும் 20-02-2016   சனிக்கிழமை, மாலை 5.30 மணியளவில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றோம்.  இவ்விழாவிற்கு அனைவரும் வருகைதந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   இடம் :  Party Centrum “Arena” Fultonsrtaat 98-100,  3133KH, Vlaardingen.  (Vlaardingen West புகையிரத நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து (56 இலக்க பஸ்) 200 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது) நன்றி.   உங்கள் நல்வரவை நாடும், பிள்ளைகள். சி.பாலன் சி.ரஞ்சன், சி.யதீஸ், சி.ரதினி.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 25-01-2016

சமையல்

சாம்பார்த்தூள் செய்முறை.

சாம்பார்த்தூள் தேவை என்றாலே நாம் கடைக்குச்செல்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே சுவையான சாம்பார் பொடி தயார் செய்யலாம் தெரியுமா? வாங்க எப்படி என்று பார்ப்போம்....   தேவையான பொருள்கள்:   துவரம் பருப்பு - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 1/4 கிலோ மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மல்லி (தனியா) - 1/2 கிலோ மிளகு - 20 கிராம் சீரகம் - 20 கிராம் வெந்தயம் - 5 கிராம் பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப   செய்முறை:   மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வத்து கொள்ளலாம். இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.   இதோ சாம்பார் பொடி தயாராகி விட்டது. இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால் ககவென்று மணக்கும். இதில் சாம்பார் வைக்கும் போது மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.   குறிப்பு:   சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 07-04-2016

தக்காளியில் மீன் பொரியல்.

தேவையான பொருட்கள்:   தக்காளி - 4 மீன் - 1/4 கிலோ இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் பொடித்த சோம்பு - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் தனியா தூள் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு   செய்முறை:   தக்காளியை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த சோம்பு, மிளகுத்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து மீன் துண்டுகள் மீது தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகு எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 23-03-2016

தக்காளியில் ஊறுகாய்.

தேவையான பொருட்கள்:   தக்காளி - 1/4 கிலோ காய்ந்த மிளகாய் - 2 மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் தனியா தூள் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 குழிக்கரண்டி பெருங்காயம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து   செய்முறை:   தக்காளியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளியுங்கள். பிறகு, இதில் மசித்த தக்காளியுடன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு பெருங்காயம் போட்டு நன்றாக வதக்குங்கள்.   இந்தக் கலவை கொதித்து நன்றாக திக்காகி எண்ணெய் மிதந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்குங்கள். இந்தக் தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 20-03-2016

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்: குணசிங்கம் புஸ்பராசா.

சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் புஸ்பராசா (மாமா) இன்று 25.02.2016 லண்டனில் மரணம் எய்திவிட்டார் அன்னார் காலம் சென்ற குணசிங்கம் செல்வரத்தினம் தம்பதியரின் அன்பு புதல்வனும் வசந்தி (லண்டன்), றஞ்சிதமலர் (இலங்கை), கயேந்திரன்(இத்தாலி), ரவிக்குட்டி (நேர்வே), குணாளன் (காலம்சென்றவர்) ஆகியோரின் சகோதர்ரும். ஐயந்தியின் அன்புக்கணவரும். பிரகாஸ் , குட்டி ஆகியோரின் அப்பாவும். துவாவின் மாமாவும். பாமா, பாஸ்கரன் , பத்மதேவி, கோணேஸ், கணேஸ்வரி, Kajen Bala, Viknan Bala , சுதனி (லண்டன்) , அனிதா, இந்திரநாயகம், மதியழகன் ஆகியோரின் மைத்துன்னும் , பாலசுப்பிரமணியம் , பாலசிங்கம் , குஞ்சியம்மா ஆகியோரின் பொறாமகனும் . சகானா, சஞ்சிபன், ரூபினி, நிவர்சன் , துசியந்தன் ஆகியேரின் மாமனும் . ஐகநாதன், ராமசந்தரன் ஆகியோரின் மைத்துன்னும். ராசா, கலைச்செல்வி ஆகயோரின் மைத்துன்னும் ஆவார் அன்னாரின் பூதவுடல் லண்டனில் உள்ள அவரின் சகோதரியின் இல்லத்தில் இறுதி கிரிகைகள் நடைபொற்று தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உள்ளார் உறவினர் அயலவர் ஏற்றுக் கொள்ளவும்   தகவல்  நிவர்சன்  மருமகன்  

மேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 26-02-2016

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: குணதீஸ்வரன் நவரத்தினம்.

கடந்த 29.01.2015 அன்று சிவபதம் எய்திய எமது குடும்ப குலவிளக்கு அமரர். நவரத்தினம் குணதீஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் எதிர்வரும் 19.01.2016 செவாய்க்கிழமை காலை 11:00 மணியளவில் கலட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடபெறும் என்பதனை அறியத்தருவதுடன், இவ் ஆத்ம சாந்தி கிரியைகளில் பங்குபற்றி பிரார்த்தனை செய்யவும், தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்கு பற்றி சிறப்பிக்கவும் வருகை தருமாறு உற்றார், உறவினர், ஊர் மக்கள், நண்பர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கின்றோம். Panippulam.com

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 11-01-2016